புனித மரியன்னை கத்தீட்ரல் பேராலயம், திருச்சிராப்பள்ளி
புனித மரியன்னை கத்தீட்ரல் பேராலயம்
இடம் : மேலப்புதூர், திருச்சிராப்பள்ளி
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
மறைமாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மறைவட்டம்: புத்தூர்
நிலை : கத்தீட்ரல் பேராலயம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோணியார் ஆலயம் – கூனிபஜார்
2. புனித செபஸ்தியார் ஆலயம் – கூனிபஜார்
3. புனித அடைக்கலமாதா ஆலயம் – கூனிபஜார்
4. புனித சவேரியார் ஆலயம் – கூனிபஜார்
5. புனித அந்தோணியார் ஆலயம் – மார்சிங்பேட்டை
6. புனித அடைகலமாதா ஆலயம் – மரக்கடை
7. புனித செபஸ்தியார் ஆலயம் – கெம்ஸ்டவுன்
8. புனித சவேரியார் ஆலயம் – கெம்ஸ்டவுன்
9. புனித செல்வநாயகி மாதா ஆலயம் – ஆலம் தெரு
10. புனித மோட்சராக்கினி மாதா ஆலயம் – காஜாபேட்டை
பங்குத்தந்தை : அருள்பணி. A. சவரிராஜ்
உதவி பங்குதந்தை: அருள்பணி. A. சகாயராஜ்
மொத்த குடும்பங்கள் : 1650
அன்பியங்கள் : 30
பேராலய தொடர்பு எண் : 0431 2411511
Email : stmaryscathedraltiruchy@gmail.com
Website : www.maryscahedraltrichy.org
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி (5): காலை 05.00, 06.30 மற்றும் 08.30 (தமிழ்)
காலை 08.30 மணி (மறைக்கல்வி தனி திருப்பலி)
மாலை 05.00 (ஆங்கிலம்)
மற்றும் மாலை 06.00 மணி திரு அவையின் திருப்புகழ் மாலை நற்கருணை ஆசீர், மாலை 06.15மணி திருப்பலி (தமிழ்)
திங்கள் முதல் சனி வரை காலை 06.00மணி திருப்பலி. மாலை 06.00 மணி செபமாலை, 06.15 மணி திருப்பலி
செவ்வாய் 06.00 மணி செபமாலை, புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
முதல் வெள்ளி மாலை 06.00 மணி நற்கருணை ஆராதனை, திருப்பலி
முதல் சனி மாலை 06.00 மணி புனித ஆரோக்கிய அன்னையின் தேர்பவனி, செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர்.
திருவிழா : ஒவொருவருடமும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வழித்தடம்: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் மேலப்புதூர் பேருந்து நிறுத்தம்.
கிளைப்பங்குகளில் திருப்பலி நேரங்கள் :
1. மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 07.00 மணி திருப்பலி : புனித அந்தோணியார் ஆலயம், மார்சிங்பேட்டை
2. மாதத்தின் இரண்டாம் செவ்வாய் மாலை 07.00 மணி திருப்பலி : புனித அந்தோணியார் ஆலயம், கூனிபஜார்
3. மாதத்தின் இரண்டாவது வெள்ளி மாலை 07.00 மணி திருப்பலி : புனித சவேரியார் ஆலயம், கூனிபஜார்
4. மாதத்தின் முதல் சனி காலை 07.00 மணி திருப்பலி : புனித மோட்ச ராக்கினி மாதா ஆலயம், பூந்தோட்டம்
5. மாதத்தின் இரண்டாம் புதன் மாலை 07.00 மணி திருப்பலி : புனித செல்வநாயகி மாதா ஆலயம், ஆலம் தெரு
6. மாதத்தின் மூன்றாவது வெள்ளி மாலை 07.00 மணி திருப்பலி : புனித சவேரியார் ஆலயம், கெம்ஸ்டவுண்
7. மாதத்தின் முன்றாவது செவ்வாய் மாலை 07.00 மணி திருப்பலி : புனித செபஸ்தியார் ஆலயம், கெம்ஸ்டவுண்
8. மாதத்தின் நான்காவது சனி மாலை 07.00 மணி திருப்பலி : புனித அடைக்கல மாதா ஆலயம், கூனிபஜார்
9. மாதத்தின் நான்காவது செவ்வாய் மாலை 07.00 மணி திருப்பலி : புனித செபஸ்தியார் ஆலயம், கூனிபஜார்
10. ஞாயிறு தோறும் மாலை 04.30 மணி திருப்பலி : புனித அடைக்கல மாதா ஆலயம், மரக்கடை
பேராலய வரலாறு
தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள புனித மரியன்னை கத்தீட்ரல் பேராலயமானது ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இது தமிழ்நாட்டின் மிகப் பழைமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.
கி.பி 1839 ம் ஆண்டு முதல் இந்த 181 ஆண்டுகளில் ஐந்து மறைமாவட்டங்களின் “மரியன்னை தேவாலயம்” அதன் அதிகார வரம்பில் செயல்பட்டு வந்தது.
ஆலயமானது அருள்பணி. லூயிஸ் கார்னியர், SJ அவர்களது பணிக்காலத்தில் கட்டப்பட்டு, 1841 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி, (அப்போஸ்தலர்களான புனித பீட்டர் மற்றும் புனித பவுல் ஆகியோரின் விழாநாள் ), பாண்டிச்சேரியின் ஆயர் மேதகு பெர்னார்ட் கிளமென்ட் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.
நீரோ மன்னனின் துன்புறுத்தலில் தங்கள் உயிரை தியாகம் செய்த புனிதர் மற்றும் புனிதைகள் தியாகத்தை சித்தரிக்கும் கூரையில் உள்ள ஓவியங்கள் (Br. டி நொய்கோர்ட் 1893 முதல் 1898 வரை) இந்த ஆலயத்தில் இருந்தன. 175 ஆண்டுகள் நீண்ட பழைமையான இவ்வாலயமானது, விரிசல்கள் மற்றும் கசிவுகள் காரணமாக, மறைமாவட்டத்தால் 2010 ஆம் ஆண்டில் ஒரு புதிய கத்தீட்ரல் ஆலயத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 2011 ஜனவரி 30 ஆம் தேதி, ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலய கட்டுமானப் பணிகள் 15.08.2011 அன்று தொடங்கியது.
அழகிய கத்தீட்ரல் ஆலயமானது ரூ.15 கோடி (150 மில்லியன்) செலவில் கட்டப்பட்டது.
03.05.2015 அன்று சமய வேறுபாடின்றி 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கத்தீட்ரலின் முற்றத்தில் கூடியிருக்க. கதீட்ரலைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும், நகரத்திற்கு பல்வேறு திசைகளுக்குச் செல்லும் சாலைகளும் மக்களால் நிரம்பியிருந்தன. சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் அர்ச்சிப்பு விழா நடந்தது. திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனி டிவோட்டா அவர்களால் ஆலயம் ஆசீர்வதிக்கப்பட்டு புனிதப் படுத்தப் பட்டது. மற்றும் பலிபீடத்தை மதுரை பேராயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ புனிதப்படுத்தினார். மற்றும் கும்பகோணம் ஆயர் மேதகு F. அந்தோனிசாமி, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் மற்றும் மார்தாண்டம் ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் ஆகியோர் பங்கேற்று ஆசீர்வதித்தனர். மிகவும் அழகான கத்தீட்ரல் ஆலயத்தை கட்டுவதற்காக முயற்சிகள் மற்றும் வழிகாட்டிய அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. டி. யூஜின் மற்றும் ஒருங்கிணைந்து பணிபுரிந்த இறைமக்கள் அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுகள்..
அழகிய இவ்வாலயத்தில் மரியன்னையின் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடந்து வருவதால், பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இறை மக்கள் ஆலயத்தை நாடி வருகின்றனர்.